Sunday, 18 July 2021

அளவீடுகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!

TNPSC அளவீடுகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!

General Knowledge Question of Measurements!


TNPSc அளவீடுகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள்!!

By :Bright Zoom GK :

★ மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் எந்த ஆண்டு பிரெஞ்சுக் காரர்களால் உருவாக்கப்பட்டது?

 - 1790


★  நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் எந்த அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது? 

- வில்லியம் பெட்வெல்


★ நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோல் எந்த நு}ற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது? 

- கி.பி பதினாறாம் நு}ற்றாண்டு


★ தெரிந்த அளவுகளுடன் தெரியாத அளவுகளை ஒப்பிடும் முறை

 - அளவீடு முறை

★ பொருளின் நிறையை அளவிட நாம் பயன்படுத்தும் தராசின் பெயர் என்ன? 

- பொதுத் தராசு


★ அளவீடு என்பது எத்தனை பகுதிகளைக் கொண்டது? 

- இரண்டு பகுதிகள் (எண் மதிப்பு மற்றும் அலகு)


★ ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட பொதுவான அலகு முறை? 

- பன்னாட்டு அலகு முறை


★ துல்லியமான அளவீடுகளில் ஏற்படும் பிழையானது, எதன் கணக்கீடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்? 

- அறிவியல் கணக்கீடுகள்


★ ஒரு பொருளின் தோற்ற நிலையை இரு வேறு பார்வைக் கோடுகளின் வழியே நோக்கும் போது ஏற்படுவதாகத் தோன்றும் அளவீட்டு மாறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

- இடமாறு தோற்றப் பிழை


★  படித்தர நிறை என்று அழைக்கப்படுவது எது? 

- பொதுத் தராசு


★ மிகப் பெரிய அளவிலான எடையை -------------- அலகில் எடுத்துக் கொள்ளலாம். 

- டன் அல்லது மெட்ரிக் டன்


★ எந்த ஒரு அளவிடும் கருவியாலும் அளவிடக் கூடிய மிகக் குறைந்த அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - மீச்சிற்றளவு


★ பொறியாளர்கள், மற்றும் பொருள்கள் உற்பத்தி செய்யும் இடங்களிலும் பயன்படுத்தப்படும் கருவி? 

- வெர்னியர் அளவி


★  கனமான உலோகக் குண்டு ஒன்றினை மெல்லிய நு}லினைக் கொண்டு கட்டித் தொங்கப்பட்ட அமைப்பின் பெயர;?

 - தனி ஊசல்


No comments:

Post a Comment

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...