இந்திய ரிசர்வ் வங்கி பற்றிய பொது அறிவு வினா விடைகள்..!
General Knowledge Quiz on Reserve Bank of India ..!
இந்திய ரிசர்வ் வங்கி பற்றிய பொது அறிவு வினா விடைகள்..!
By: Bright Zoom GK:
★ சர்வதேச பண நிதியத்தின் (International Monetary Fund) இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக செயல்படும் வங்கி எது?
- இந்திய ரிசர்வ் வங்கி
★ இந்திய ரிசர்வ் வங்கியின் மையக்குழுமத்தின் ஒரு குழுவாக, நிதியியல் மேற்பார்வைக் குழுமம் எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
- 1994, நவம்பர்
★ ரிசர்வ் வங்கியின் மையக் குழுமத்தில், எத்தனை இயக்குநர்களை உறுப்பினர்களாக முன்மொழிந்து நிதியியல் மேற்பார்வைக் குழுமம் துவக்கப்பட்டது.
- நான்கு
★ இந்திய அரசுக்குச் ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு ழுமையாக சொந்தமானது?
- 1949
★ மத்திய அரசின் வங்கியாகவும், முகவராகவும், ஆலோசகராகவும் செயல்படும் வங்கி எது?
- ரிசர்வ் வங்கி
★ ரிசர்வ் வங்கியில் -------------- கணக்கு துவங்க முடியாது.
- தனியார் கணக்கு
★ இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் ----------- மற்றும் ----------- ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
- தங்கம் மற்றும் ரொக்கம்
★ இம்பீரியல் வங்கி (IMPERIAL BANK) எந்த ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி(STATE BANK) எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டது?
- 1955
★ இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதல் வங்கி எது?
- பஞ்சாப் நேஷனல் வங்கி
★ பஞ்சாப் நேஷனல் வங்கி, எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- 1894
★ எந்த கொள்கையைக் கட்டுப்படுத்துகிற ஒரு மைய வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்படுகிறது.
- பணவியல் கொள்கை
★ இந்தியா முழுவதும் ரிசர்வ் வங்கிக்கு எத்தனை வட்டாரக் கிளைகள் உள்ளன?
- 22
★ எத்தனை மண்டல அலுவலகங்களை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது?
- நான்கு
★ ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் யார்?
- சக்திகாந்த தாஸ்
No comments:
Post a Comment