Showing posts with label Quizzes on Indian Rivers. Show all posts
Showing posts with label Quizzes on Indian Rivers. Show all posts

Thursday, 23 July 2020

இந்திய ஆறுகள் பற்றிய வினா விடைகள்!!!

இந்திய ஆறுகள் பற்றிய வினா விடைகள்!!!

Quizzes on Indian Rivers !!!

Bright Zoom GK,

Bright Zoom GK,

இந்திய ஆறுகள் பற்றிய வினா விடைகள்!!!


🌺 திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் ஆறு எது?

 - பிரம்ம புத்ரா

🌺 சிந்து நதி, இந்தியப் பகுதியில் மட்டும் எத்தனை கி.மீ நீளம் பாய்கிறது?

- 709 கி.மீ

🌺 ஜீலம், சினாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகள் எந்த நதியின் துணை ஆறுகளாகும்?

 - சிந்து நதி


🌺 தென்னிந்தியாவின் கங்கை என அழைக்கப்படும் ஆறு எது?

 - காவிரி

🌺 மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் உற்பத்தியாகும் ஆறு எது?

 - நர்மதை

🌺 கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்?

 - நர்மதை, தபதி, மாஹி

🌺 குடகு மலையில் உற்பத்தியாகும் ஆறு எது? 

- காவிரி ஆறு

🌺 மகாநதி, கோதாவரி, காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் பாயும் திசை?

- கிழக்கு

🌺 கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு எவற்றின் முக்கிய துணையாறுகளாகும்?

 - கிருஷ்ணா.

🌺 நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடும் ஆறுகள்?

 - தீபகற்ப ஆறுகள்

🌺 3.13 இலட்சம் சதுர.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்ட ஆறு?

 - கோதாவரி

🌺 ஆந்திரப் பிரதேசத்தின் வழியாகப் பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறு?

 - கிருஷ்ணா ஆறு


🌺 காவிரி ஆறு, திருச்சிராப்பள்ளிக்கு முன் --------- அருகே கொள்ளிடம், காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிகிறது.

 - ஸ்ரீ ரங்கம்

🌺 வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன எந்த ஆற்றின் துணை ஆறுகளாகும்?

 - தபதி


1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...