பொருளாதாரம் குறித்த பொது அறிவு வினா விடைகள்..!
General Knowledge Quiz on Economics ..!
Bright zoom gk
◆ பொருளியலின் இலக்கணத்தை வரையறுத்துள்ளவர் யார்?
- ஆதம் ஸ்மித்
◆ 1776-ம் ஆண்டில் ஆதம் ஸ்மித் எழுதிய புத்தகத்தின் பெயர; என்ன?
- நாடுகளின் செல்வம்
◆ 'அரசியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?
- ஆதம் ஸ்மித்
◆ பொருளியலை 'மகிழ்வற்ற அறிவியல்" என்றும், 'இருண்ட அறிவியல்" என்றும் அழைத்தவர்கள் யார்?
- கார்லைல் மற்றும் ரஸ்கின்
◆ 1890-ம் ஆண்டு பொருளாதார கோட்பாடுகள் என்ற நு}லை வெளியிட்டவர் யார்?
- ஆல்ஃபிரடு மார்ஷல்
◆ யாருடைய இலக்கணம், மனித நடவடிக்கைகளை பொருளியல் சார்ந்த நடவடிக்கைகள், பொருளியல் சாரா நடவடிக்கைகள் என இருவகையாக வகைப்படுத்துகிறது?
- ஆல்ஃபிரடு மார்ஷல்
◆ 'பொருளியல் பிரச்சனைகள், பற்றாக்குறையினாலே எழுகிறது" என்பது யாருடைய கூற்றாகும்?
- இராபின்சன்
◆ யாருடைய இலக்கணம் நவீன பொருளாதார இலக்கணமாகக் கருதப்படுகிறது?
- சாமுவெல்சன்
◆ ---------- என்பது ஒரு சட்ட அறிவியலாகும்.
- சட்ட இயல்
◆ பண்டங்களை எத்தனை வகைப்படுத்தலாம்?
- இருவகை (உற்பத்திப் பண்டம், நுகர்வுப் பண்டம்)
◆ ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு --------- ஆகும்.
- நாட்டு வருமானம்
◆ நாட்டு வருமானத்தை, அந்நாட்டின் மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது? - தலா வருமானம் (அ) தனி நபர் வருமானம்
◆ யாருடைய பொருளாதார கொள்கைகள், 1930-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து அமெரிக்கா அரசு மீட்சி பெற முக்கிய பங்காற்றின? - து.ஆ.கீன்ஸ்
◆ ------------- வருமானம் என்பது விலையால் சரி செய்யப்படும் பண வருமானம் ஆகும்.
- உண்மை வருமானம்
பொது அறிவு வினா விடைகள்
◆ இந்திய பொருளாதாரம் ---------- பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
- கலப்பு பொருளாதாரம்
◆ உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்திருக்கிறது?
- 7-வது இடம்
◆ இந்தியாவில் எத்தனை சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்?
- 60%
◆ பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் ---------- முக்கிய அறிகுறியாகும்.
- நகரமயமாதல்
◆ விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் ------- நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
- G20 நாடுகள்
◆ இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது எது?
- அதிக மக்கள் தொகை
◆ தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
- 1950
◆ காந்தியப் பொருளாதாரம் எதை அடிப்படையாகக் கொண்டது?
- நன்நெறிப் பொருளாதாரம்
◆ நவீன இந்தியாவைக் கட்டமைத்த சிற்பிகளில் முதன்மையானவர் யார்?
- ஜவஹர்லால் நேரு
◆ 'இந்தியாவில் குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்" என்ற கட்டுரையை எழுதியவர் யார்?
- அம்பேத்கர்
◆ தலா வருமானத்தைப் பொறுத்து ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நாட்டு நலன் ஆகியவை அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- பொருளாதார முன்னேற்றம்
◆ 'மொத்த நாட்டு மகிழ்ச்சி" என்ற தொடர் யாரால் உருவாக்கப்பட்டது?
- பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே-சிங்கே-வாங்சுக்
◆ அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ---------- நாடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
- முன்னேறிய நாடுகள்
◆ இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்தத் துறையிலிருந்து கிடைக்கிறது? - வேளாண்மை
No comments:
Post a Comment