இந்திய அரசியல் அமைப்பு பொது அறிவு வினா விடைகள்...!
Indian Political System General Knowledge Quiz ...!
இந்திய அரசியல் அமைப்பு பொது அறிவு வினா விடைகள்...!
By : Bright Zoom GK:
💠சிட்டிசன் என்பதன் பொருள் என்ன?
- நகர அரசில் வசிப்பவர்
💠இந்திய அரசியல் அமைப்பின் எந்த பாகம் மக்களின் குடியுரிமையைப் பற்றி விளக்குகிறது?
- பாகம் 2 (சட்டப்பிரிவுகள் 5-லிருந்து 11-வரை)
💠எந்த ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியவை பற்றி விளக்குகிறது.
- 1955-ல்
💠குடியுரிமை சட்டம், இந்திய அரசியலமைப்பால் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
- எட்டு முறை
💠இந்திய அரசியலமைப்பில் பகுதி(ஐஐஐ), 12-ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் ----------- பற்றி கூறுகின்றன.
- அடிப்படை உரிமைகள்
💠தற்போது, இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளின் எண்ணிக்கை?
- ஆறு
💠இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி இந்தியாவின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது?
- பகுதி (lll)
💠சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசியல் சட்டப்பிரிவு?
- பிரிவு 14
💠மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடை செய்யும் அரசியல் பிரிவு?
- பிரிவு 15
💠பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பளிக்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு எது?
- பிரிவு - 16
💠இந்திய அரசியல் அமைப்பின் எந்த பிரிவு தீண்டாமை ஒழித்தல் பற்றி கூறுகிறது?
- பிரிவு 17
💠கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத் தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல் பற்றிக் கூறும் அரசியல் சட்டப் பிரிவு?
- பிரிவு 23
💠தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையினை தடுக்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு?
- பிரிவு 24
💠சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சார பாதுகாப்பு பற்றிக் கூறும் பிரிவு?
- பிரிவு 29
💠சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு?
- பிரிவு 30
பொது அறிவு வினா விடைகள்
💠எந்த ஆண்டு 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது?
- 1978
💠தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல் பற்றிக்கூறும் அரசியல் சரத்து?
- பிரிவு 32
💠எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம் பற்றிக் கூறும் அரசியல் சரத்து?
- பிரிவு 27
💠சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை பற்றிக் கூறும் அரசியல் சரத்து?
- பிரிவு 26
💠எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை கூறும் அரசியல் சரத்து?
- பிரிவு 25
💠தொடக்கக்கல்வி பெறும் உரிமை பற்றிக் கூறும் இந்திய அரசியல் அமைப்பு?
- பிரிவு - 21A
💠இந்திய அரசியல் அமைப்பின் எந்த சரத்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை பற்றிக் கூறுகிறது? - பிரிவு 20
💠பெரும் முதலாளிகளிடமிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக கி.பி.(பொ.ஆ) 1215-ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயமே, ---------- எனப்படும்.
- மகாசாசனம்
💠உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் இரண்டுமே எத்தனை வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன?
- ஐந்து வகை
1. அவை ஆட்கொணர்வு நீதிப்பேராணை,
2. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை,
3. தடையுறுத்தும் நீதிப்பேராணை
4.ஆவணக் கேட்பு நீதிப்பேராணை,
5. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை ஆகியனவாகும்.
💠இந்திய அரசியலமைப்பின் 'புதுமையான சிறப்பம்சம்" Dr. B.R. அம்பேத்கர் எதனைக் குறிப்பிடுகிறார்?
- அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
💠Dr.B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பின் எத்தனையாவது சட்டப்பிரிவு, இந்திய அரசியலமைப்பின் 'இதயம் மற்றும் ஆன்மா" போன்றதாகும்? -
- சட்டப்பிரிவு 32
💠1976-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி யார் தலைமையில் கமிட்டியை அமைத்து அடிப்படை கடமைகள் குறித்து ஆராயப் பரிந்துரை செய்தது?
- சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டி
பொது அறிவு வினா விடைகள்
💠இந்தியாவில், முதலாவது மொழிக்குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது?
- 1955-ம்
💠நாடாளுமன்றம் ---------- ஆண்டில் அலுவலக மொழி சட்டம் இயற்றியது.
- 1963-ம்
💠தொடக்கத்தில் 14 மொழிகள் அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
- 8-வது
(தற்போது 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன)
💠இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசு தலைவர், அரசியலமைப்பு சட்டப்பிரிவு ----------- கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
- 352-ன்
💠போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அந்நிலை ------------ எனப்படுகிறது.
- வெளிப்புற அவசரநிலை
💠ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அந்நிலை ----------- எனப்படுகிறது.
- உள்நாட்டு அவசர நிலை
(இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.)
💠இந்தியாவில் முதன்முறையாக ------------ பஞ்சாப் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
- 1951-ல்
💠ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சு+ழல் ஏற்படும்பொழுது, அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசு தலைவர் அரசியலமைப்பு எந்த சட்டப்பிரிவின் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
- 356-ன்
💠இந்திய நிதிநிலைத் தன்மை, இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்திலிருந்தால் அரசியலமைப்பு எந்த சட்டப்பிரிவின் கீழ் குடியரசு தலைவர் நிதிசார்ந்த அவசரநிலையை பிறப்பிக்கலாம்.
- 360-வது சட்டப்பிரிவு
💠அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
- 368-வது சட்டப்பிரிவு
💠அரசியலமைப்பின் 42-வது சட்டத்திருத்தம் ------------ என அறியப்படுகிறது.
- சிறிய அரசியலமைப்பு
💠இந்திய அரசியலமைப்பு பகுதி -------------ல், 368-வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செய்வது, அரசியலமைப்பு திருத்த நடைமுறைகள் மற்றும் அது குறித்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி விவரிக்கிறது.
- XX-ல்