ஆட்டின் விலை 15 லட்சம்மா..!
Bright Zoom GK,
ஆட்டின் விலை 15 லட்சம்மா..!
ஆஸ்திரேலியாவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா" என்கிற அளவுக்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நியூ சவுத் வேல்ஸில் கால்நடைப் பண்னைகள் அதிகம். குறிப்பாக, ஆடு வளர்ப்பு அங்கு சமீபகாலமாக சூடு பிடித்துள்ளது. இதனால் வெறும் 3, 4 டாலர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஆடுகள் இப்போது 180 டாலர் வரை விலை போகின்றனவாம். அதிலும் ஆரோக்கியமான, போஷாக்கு நிறைந்த ஆடுகளுக்கான மரியாதையோ இன்னும் அதிகம். அந்த வகை யில் கோபார் என்ற சிறு நகரில், ஓர் ஆடு 15 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளது. இந்த ஆட்டுக்கு மர்ராகேஷ் என்று பெயர். ஆண்ட்ரூ மற்றும் மிகன் மோஸ்லி என்ற தம்பதிகள் தங்கள் பண்ணைக் காக இந்த ஆட்டை வாங்கியிருக்கிறார்கள். சரி... எதற்காக இத்தளை விளை கொடுத்து மர்ராகேஷை வாங்கினார்கள்?
செயற்கைக் கருவூட்டன் முறையில், ஜௌட்டிக் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி, மேலும் கொழு கொழுப்பான ஆடுகளை உற்பத்தி செய்யவிருக் கிறோம்' என்கிறார்கள் இத்தம்பதியினர் ஆஸ்தி ரேவியாவில் இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்படுமாம். இதற்கு முன்பு 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆடு விற்கப்பட்டது. அந்த சாதனையை இந்த ஆடு முறியடித்திருக்கிறது என்கிறார்கள்.