Wednesday, 22 March 2023

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.!

History of Tamils ​​1400 years ago.!

Bright Zoom gk,

இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு தொல்பொருள் கண்டுபிடிப்பு!


tamils-jaffna-historic-2

யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களால் மன்னார் கட்டுக்கரை குள முகப்பு பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது சுமார் 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் குடியிருப்புக்களுடன் கூடிய சமய வழிபாட்டுக்குரிய தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


tamils-jaffna-historic


வட இலங்கையில் தெளிவில்லாமல் இருந்த தமிழர் வரலாறு இதன்மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்


tamils-jaffna-historic-3


மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படுகின்ற, அகழ்வாராய்ச்சியொன்றில், 1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்னம் கூறுகின்றார்.

அவருடைய தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்கள் இந்த ஆய்வகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அகழ்வாராய்ச்சியில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கின்றது. இதற்கான தொன்மைச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இது பெரும்பாலும் குளத்துக்கு உள்ளேயும், நாங்கள் ஆய்வு செய்த இடத்திற்கு அப்பாலும் இந்தச் சான்றுகளுக்கான அடையாளப் பொருட்கள் காணப்படுகின்றன என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.

மூன்று மீட்டர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகள் அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்த ஆய்வின் மூலம் புதிய வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து அனுராதபுரத்தின் புராதன இராசதானிக்கு அடைக்கப்பட்டிருந்த வீதியோரத்தில் இந்தக் குடியிருப்புக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு மத்திய கலாசார நிதியம், தொல்லியல் மரபுரிமைப் பிரிவு, சுற்றுச் சூழல் பிரிவு ஆகியன யாழ் பல்கலைக்கழகத்தின்; பொறுப்பில் அனுசரணை வழங்கியிருக்கின்றன.

இந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும், தொல்லியல் மரபு நிலையத்தைப் பராமரிப்பதற்குமாக மன்னார் மாவட்டத்திற்கு மத்திய கலாசார நிதியம் அடுத்த ஆண்டுக்கென ஒரு மில்லியன் ரூபா நிதியொதுக்கியிருப்பதாக யாழ் மாவட்ட மத்திய கலாசார நிலைய அதிகாரி லக்ஸ்மன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் மரபுரிமை நிலையங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்குமாக மத்திய கலாசார நிதியம் 150 மில்லியன் ரூபா நிதியை அடுத்த ஆண்டுக்கென ஒதுக்கியிருக்கின்றது என்றார் லக்ஸ்மன்.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் அகழ்வாராய்ச்சியில் ஐயனார் வழிபாடு செய்யப்பட்ட இடம் அல்லது ஐயனார் கோவில் ஒன்று அமைந்திருந்தமைக்கான அடையாளங்கள் இந்த அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன. ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில்கூட இந்த வகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கின்றது என்றார் பேராசிரியர் புஸ்பரட்னம்.


tamils-jaffna-historic-5tamils-jaffna-historic-4


மட்டக்களப்பில் சங்க கால சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் மேற்கு திசையாக உள்ள வயற்கரையில் விவசாயிகளினால் கிணறு வெட்டும் போது சுடு மண்ணினால் உருவாக்கப்பட்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனும், பேராசிரியரின் தொல்பொருள் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான செ.பத்மநாதனும் நேரடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.


batti-well-1


இதன்போது, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கிணற்றின் தொல்பொருள் சான்றுகளை ஆய்வு செய்து அடையாளப்படுத்தியதோடு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளில் காணப்படும் “நாகன்” எனும் வரிவடிவம் தமிழ்மொழி என குறிப்பிட்டுள்ளனர்.

Sunday, 16 October 2022

இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் 1940 களில் | In the 1940s at a meeting of the Indian National Congress.

இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் 1940 களில் | In the 1940s at a meeting of the Indian National Congress.
படத்தில் மௌலானா ஆசாத், மியான் இப்திகாருதீன், ஜவஹர்லால் நேரு மற்றும் பச்சா கான்

Bright Zoom GK


படம் தரும் செய்தி: 

மௌலானா அபுல் கலாம் ஆசாத், மியான் இப்திகாருதீன், ஜவஹர்லால் நேரு மற்றும் கான் அப்துல் கஃபர் கான் ஆகியோர் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் 1940 களில் சுதந்திர இயக்கத்தின் போது எடுக்கப்பட்ட இந்த தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் ஒன்றாகக் காணப்படுகின்றனர்.


 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த உருது எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆசாத், பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார்.


 பச்சா கான் இறுதியில் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்தார் மற்றும் பாகிஸ்தான் அரசியலில் முன்னணியில் இருந்தார், ஆனால் அவர் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டார் மற்றும் அடிக்கடி கைது செய்யப்பட்டார் அல்லது நாடுகடத்தப்பட்டார்.


 மியான் இப்திகாருதீன் 1946 இல் முஸ்லீம் லீக்கில் சேர்ந்தார், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் அகதிகள் அமைச்சரானார்.  ஆனால் அவர் பஞ்சாபில் கடுமையான நிலச் சீர்திருத்தங்களை ஆதரிக்கத் தொடங்கியபோது, ​​​​முஸ்லீம் லீக்கில் பலர் அவரை எதிர்க்கத் தொடங்கினர்.  விரக்தியடைந்த அவர், 1949ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1951ல், கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.


 அவர் தனது சொந்த ஆசாத் பாகிஸ்தான் கட்சியை உருவாக்கினார், அது பின்னர் - பச்சா கானின் குடாய் கித்மத்கர் இயக்கம் மற்றும் பிற இடதுசாரி கட்சிகளுடன் - தேசிய அவாமி கட்சியுடன் இணைந்தது.


 1947 முதல் 1951 வரை ஃபைஸ் அகமது ஃபைஸ் அதன் ஆசிரியராக இருந்த மியான் இப்திகாருதின் இடது சார்பு செய்தித்தாள் பாகிஸ்தான் டைம்ஸை வைத்திருந்தார்.


Saturday, 18 June 2022

ஹைட்ரஜன் (Hydrogen)

 ஹைட்ரஜன் 

 (Hydrogen)

அணு எண் : 1

அணு எடை : 1.00794

உருகுநிலை : 13.81 K (-259.34°C அல்லது -434.81°F)

கொதிநிலை : 20.28 K (-252.87°C அல்லது -423.17°F)

அடர்த்தி : ஒரு கன சென்டிமீட்டருக்கு 0.00008988 கிராம்

அறை வெப்பநிலையில் கட்டம் : எரிவாயு

உறுப்பு வகைப்பாடு : உலோகம் அல்லாதது

கால எண் : 1

குழு எண் : 1

குழுவின் பெயர் : இல்லை

பெயரில் என்ன இருக்கிறது? கிரேக்க வார்த்தைகளில் இருந்து ஹைட்ரோ மற்றும் ஜீன்ஸ் , இவை ஒன்றாக "நீர் உருவாக்கம்" என்று பொருள்படும்.

என்ன சொல்ல? ஹைட்ரஜன் HI-dreh-jen என உச்சரிக்கப்படுகிறது .

வரலாறு மற்றும் பயன்பாடுகள் :

ஹைட்ரஜனை ஒரு தனிமமாக அங்கீகரிக்கும் முன்பே விஞ்ஞானிகள் பல வருடங்களாக அதை உற்பத்தி செய்து வந்தனர். 1671 ஆம் ஆண்டிலேயே இரும்பு மற்றும் அமிலங்களைப் பரிசோதிக்கும் போது ராபர்ட் பாயில் ஹைட்ரஜன் வாயுவைத் தயாரித்ததாக எழுதப்பட்ட பதிவுகள் குறிப்பிடுகின்றன . ஹைட்ரஜன் முதன்முதலில் 1766 இல் ஹென்றி கேவென்டிஷ் என்பவரால் ஒரு தனித்துவமான தனிமமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஒரு புரோட்டான் மற்றும் ஒற்றை எலக்ட்ரானைக் கொண்ட ஹைட்ரஜன் , பிரபஞ்சத்தில் மிகவும் எளிமையான மற்றும் மிகுதியான தனிமமாகும் . காணக்கூடிய பிரபஞ்சத்தின் 90% ஹைட்ரஜனால் ஆனது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் என்பது பெரும்பாலான நட்சத்திரங்கள் ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக 'எரிக்கும்' மூல எரிபொருள் ஆகும். இணைவு எனப்படும் அதே செயல்முறை, பூமியில் பயன்படுத்துவதற்கான சாத்தியமான ஆற்றல் மூலமாக ஆய்வு செய்யப்படுகிறது. சூரியனின் ஹைட்ரஜன் வழங்கல் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைட்ரஜன் வணிகரீதியாக முக்கியமான ஒரு தனிமம். அதிக அளவு ஹைட்ரஜன் காற்றில் இருந்து நைட்ரஜனுடன் இணைந்து அம்மோனியாவை (NH 3 ) ஹேபர் செயல்முறை எனப்படும் செயல்முறை மூலம் உருவாக்குகிறது. ஹைட்ரஜனேற்றம் எனப்படும் செயல்முறையின் மூலம் கடலை எண்ணெய் போன்ற கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களிலும் ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது. திரவ ஹைட்ரஜன் சூப்பர் கண்டக்டர்களின் ஆய்வில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் திரவ ஆக்ஸிஜனுடன் இணைந்தால் , ஒரு சிறந்த ராக்கெட் எரிபொருளை உருவாக்குகிறது.

ஹைட்ரஜன் மற்ற தனிமங்களுடன் இணைந்து பல சேர்மங்களை உருவாக்குகிறது. சில பொதுவானவை: நீர் (H 2 O), அம்மோனியா (NH 3 ), மீத்தேன் (CH 4 ), டேபிள் சர்க்கரை (C 12 H 22 O 11 ), ஹைட்ரஜன் பெராக்சைடு (H 2 O 2 ) மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl )

ஹைட்ரஜனுக்கு மூன்று பொதுவான ஐசோடோப்புகள் உள்ளன . புரோட்டியம் எனப்படும் எளிய ஐசோடோப்பு சாதாரண ஹைட்ரஜன் ஆகும். இரண்டாவது, டியூட்டிரியம் எனப்படும் ஒரு நிலையான ஐசோடோப்பு , 1932 இல் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது ஐசோடோப்பு, ட்ரிடியம் , 1934 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

தோராயமான மிகுதி : 1.40×10 3 மில்லிகிராம் ஒரு கிலோகிராம்

மதிப்பிடப்பட்ட கடல் மிகுதி : 1.08×10 5 மில்லிகிராம் ஒரு லிட்டருக்கு

நிலையான ஐசோடோப்புகளின் எண்ணிக்கை : 2 

அயனியாக்கம் ஆற்றல் : 13.598 eV

ஆக்சிஜனேற்ற நிலைகள் : +1, -1

எலக்ட்ரான் ஷெல் கட்டமைப்பு :

1வி 1



Sunday, 19 December 2021

ஆட்டின் விலை 15 லட்சம்மா..!

ஆட்டின் விலை 15 லட்சம்மா..!

Bright Zoom GK,


ஆட்டின் விலை 15 லட்சம்மா..!

ஆஸ்திரேலியாவா இருந்தாலும் ஒரு நியாயம்  வேணாமா" என்கிற அளவுக்கு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நியூ சவுத் வேல்ஸில் கால்நடைப் பண்னைகள் அதிகம். குறிப்பாக, ஆடு வளர்ப்பு அங்கு சமீபகாலமாக சூடு பிடித்துள்ளது. இதனால் வெறும் 3, 4 டாலர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஆடுகள் இப்போது 180 டாலர் வரை விலை போகின்றனவாம். அதிலும் ஆரோக்கியமான, போஷாக்கு நிறைந்த ஆடுகளுக்கான மரியாதையோ இன்னும் அதிகம். அந்த வகை யில் கோபார் என்ற சிறு நகரில், ஓர் ஆடு 15 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளது. இந்த ஆட்டுக்கு மர்ராகேஷ் என்று பெயர். ஆண்ட்ரூ மற்றும் மிகன் மோஸ்லி என்ற தம்பதிகள் தங்கள் பண்ணைக் காக இந்த ஆட்டை வாங்கியிருக்கிறார்கள். சரி... எதற்காக இத்தளை விளை கொடுத்து மர்ராகேஷை வாங்கினார்கள்?

செயற்கைக் கருவூட்டன் முறையில், ஜௌட்டிக் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி, மேலும் கொழு கொழுப்பான ஆடுகளை உற்பத்தி செய்யவிருக் கிறோம்' என்கிறார்கள் இத்தம்பதியினர் ஆஸ்தி ரேவியாவில் இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆடுகள் அதிக விலைக்கு விற்கப்படுமாம். இதற்கு முன்பு 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆடு விற்கப்பட்டது. அந்த சாதனையை இந்த ஆடு முறியடித்திருக்கிறது என்கிறார்கள்.

உலகை ஆளும் இந்தியர்கள்..!

 உலகை ஆளும் இந்தியர்கள்..!

Indians ruling the world ..!

Bright Zoom GK,


உலகை ஆளும் இந்தியர்கள்..!

★ இன்றைய நண்ள உலகை இணையம் ஆள்கிறது என்றால், இணையத்தை ஆள்கிற வர்களாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். 

★ சர்வதேச அரங்கில் திறமைமிக்க இந்தியர்களுக்கான டிமாண்ட் சுடந்த 20 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. 

★ குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் ஆண்டுக்காண்டு அதிக மாகவே உள்ளது. 

★ அமெரிக்காவின் எச்பிர்ட விசாவை அதிகம் பயன்படுத்துகிறவர்களாக வும் இந்தியர்கள் உள்ளனர். 

★ இதன் அடையாளமாகவே கூகுள் நிறு வனத்தின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். 

★ மைக்ரோ ஸாப்ட்டிலிருந்து பில்கேட்ஸ் ஓய்வுபெற்ற பிறகு, தற்போது சத்யநாதெள்ளா என்ற இந்தியர் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.

★ இந்த பெருமையின் அடுத்த கட்டமாக உலகின் மிக முக்கிய -சமூக வலைதளமான டிவிட்டரின் தலைமைப் பொறுப்பு மீண்டும் ஓர் இந்தியருக்கு தேடி வந்துள்ளது.

★ டிவிட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜேக் டோர்சி பதவி விலகியதை அடுத்து அந்த உயர்ந்த பத விக்கு இந்தியரான பராக் அகர்வால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.


பராக் அகர்வால் சையில் தற்போது பராக் இதன் மூலம் உலகைக் கலக்கும் இந்தியசி .ஓரி அகர்வாலும் சேர்ந்துள்ளார். இத்துடன் உலகின் மிக இளவயது சி.ஈஓ என்ற பெய ரானது. 37 வயதான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க்குக்கு உள்ளது. அதில் தற்போது அதே வயதுள்ள பராக் அகர்வா லும் இணைகிறார்.


Friday, 26 November 2021

தந்தை எனப் போற்றப் படுபவர்கள்..!

பொது அறிவு ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப் படுபவர்கள்..!

People who are praised as fathers in every field of general knowledge ..!

Bright Zoom GK,

1) வரலாற்றின் தந்தை?

ஹெரடோடஸ்


2) புவியலின் தந்தை?

தாலமி


3) இயற்பியலின் தந்தை?

நியூட்டன்


4) வேதியியலின் தந்தை?

இராபர்ட் பாயில்


5) கணிப்பொறியின் தந்தை?

சார்லஸ் பேபேஜ்


6) தாவரவியலின் தந்தை?

தியோபிராச்டஸ்


7) விலங்கியலின் தந்தை?

அரிஸ்டாட்டில்


8) பொருளாதாரத்தின் தந்தை?

ஆடம் ஸ்மித்


9) சமூகவியலின் தந்தை?

அகஸ்டஸ் காம்தே


10) அரசியல் அறிவியலின் தந்தை?

அரிஸ்டாட்டில்


11) அரசியல் தத்துவத்தின் தந்தை?

பிளேட்டோ


12) மரபியலின் தந்தை?

கிரிகர் கோகன் மெண்டல்


13) நவீன மரபியலின் தந்தை?

T .H . மார்கன்


14) வகைப்பாட்டியலின் தந்தை?

கார்ல் லின்னேயஸ்


15) மருத்துவத்தின் தந்தை?

ஹிப்போகிறேட்டஸ்


16) ஹோமியோபதியின் தந்தை?

சாமுவேல் ஹானிமன்


17) ஆயுர்வேதத்தின் தந்தை?

தன்வந்திரி


18) சட்டத்துறையின் தந்தை?

ஜெராமி பென்தம்


19) ஜியோமிதியின் தந்தை?

யூக்லிட்


20) நோய் தடுப்பியலின் தந்தை?

எட்வர்ட் ஜென்னர்


21) தொல் உயரியியலின் தந்தை?

சார்லஸ் குவியர்


22) சுற்றுச் சூழலியலின் தந்தை?

எர்னஸ்ட் ஹேக்கல்


23) நுண் உயரியியலின் தந்தை?

ஆண்டன் வான் லூவன் ஹாக்


24) அணுக்கரு இயற்பியலின் தந்தை?

எர்னஸ்ட் ரூதர்போர்ட்


25) நவீன வேதியியலின் தந்தை?

லாவாயசியர்


26) நவீன இயற்பியலின் தந்தை?

ஐன்ஸ்டீன்


27) செல்போனின் தந்தை?

மார்டின் கூப்பர்


28) ரயில்வேயின் தந்தை?

ஜார்ஜ் ஸ்டீவன்சன்


29) தொலைபேசியின் தந்தை?

கிரகாம்ப்பெல்


30) நகைச்சுவையின் தந்தை?

அறிச்டோபேனஸ்


31) துப்பறியும் நாவல்களின் தந்தை?


எட்கர் ஆலன்போ

32) இந்திய சினிமாவின் தந்தை?

தாத்தா சாகேப் பால்கே


33) இந்திய அணுக்கருவியலின் தந்தை?

ஹோமி பாபா


34) இந்திய விண்வெளியின் தந்தை?

விக்ரம் சாராபாய்


35) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?

டாட்டா


36) இந்திய ஏவுகணையின் தந்தை?

அப்துல் கலாம்


37) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?

சுவாமிநாதன்


38) இந்திய பட்ஜெட்டின் தந்தை?

ஜேம்ஸ் வில்சன்


39) இந்திய திட்டவியலின் தந்தை?

விச்வேச்வரைய்யா


40) இந்திய புள்ளியியலின் தந்தை?

மகலனோபிஸ்


41) இந்திய தொழில்துறையின் தந்தை?

டாட்டா


42) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?

தாதாபாய் நௌரோஜி


43) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி


44) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?

ராஜாராம் மோகன்ராய்


45) இந்திய கூட்டுறவின் தந்தை?

பிரடெரிக் நிக்கல்சன்


46) இந்திய ஓவியத்தின் தந்தை?

நந்தலால் போஸ்


47) இந்திய கல்வெட்டியலின் தந்தை?

ஜேம்ஸ் பிரின்சப்


48) இந்தியவியலின் தந்தை?

வில்லியம் ஜான்ஸ்


49) இந்திய பறவையியலின் தந்தை?

எ.ஒ.ஹியூம்


50) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?

ரிப்பன் பிரபு


51) இந்திய ரயில்வேயின் தந்தை?

டல்ஹௌசி பிரபு


52) இந்திய சர்க்கஸின் தந்தை?

கீலெரி குஞ்சிக் கண்ணன்


53) இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?

கே.எம் முன்ஷி


54) ஜனநாயகத்தின் தந்தை?

பெரிக்ளிஸ்


55) அட்சுக்கூடத்தின் தந்தை?

கூடன்பர்க்


56) சுற்றுலாவின் தந்தை?

தாமஸ் குக்


57) ஆசிய விளையாட்டின் தந்தை?

குருதத் சுவாதி


58) இன்டர்நெட்டின் தந்தை?

விண்டேன் சர்ப்


59) மின் அஞ்சலின் தந்தை?

ரே டொமில்சன்


60) அறுவை சிகிச்சையின் தந்தை?

சுஸ்ருதர்


61) தத்துவ சிந்தனையின் தந்தை?

சாக்ரடிஸ்


62) கணித அறிவியலின் தந்தை?

பிதாகரஸ்


63) மனோதத்துவத்தின் தந்தை?

சிக்மண்ட் பிரைடு


64) கூட்டுறவு அமைப்பின் தந்தை?

இராபர்ட் ஓவன்


65) குளோனிங்கின் தந்தை?

இயான் வில்முட்


66) பசுமைப்புரட்சியின் தந்தை?

நார்மன் போர்லாக்


67) உருது இலக்கியத்தின் தந்தை?

அமீர் குஸ்ரு


68) ஆங்கிலக் கவிதையின் தந்தை?

ஜியாப்ரி சாசர்


69) அறிவியல் நாவல்களின் தந்தை?

வெர்னே


70) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?

அவினாசி மகாலிங்கம்


71) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?

வர்க்கீஸ் குரியன்

அறிவியல் கருவிகள்...!

TNPSC - பொது அறிவு தகவல்கள்..!

அறிவியல் கருவிகள்...!

Scientific tools ...!

Bright Zoom GK,

◆ வெப்பத்தை அளக்க 

- கலோரி மீட்டர்.

◆ கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க 

- குரோனோ மீட்டர்

◆ நீருக்கடியில் சப்தத்தை அளவிட 

- ஹைட்ரோபோன்

◆ வெப்பநிலைப்படுத்தி

 - தெர்மோஸ்டாட்

◆ மனித உடலின் உள் உறுப்பு களை காண 

- எண்டோஸ்கோப்

◆ கடல் மட்டத்திலிருந்து உயரம் காண  

- ஆல்டி மீட்டர்

◆. உயர் வெப்பநிலையை அளக்க 

- பைரோ மீட்டர்

◆ மின்னோட்டத்தை அளக்க 

- அம்மீட்டர்

◆ காற்றின் திசைவேகம் காண

 - அனிமோ மீட்டர்

◆ வளிமண்டல அழுத்தம் காண 

- பாரோ மீட்டர்

◆ நீரின் ஆழத்தை அளவிட

 - ஃபேத்தோ மீட்டர்

◆ திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய

 - ஹைட்ரோ மீட்டர்

◆ பாலின் தூய்மையை அறிய

 - லாக்டோ மாட்டர்

◆ சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய

 - ஓடோ மீட்டர்

◆ பூகம்ப உக்கிரம் அளக்க

 - சீஸ்மோ மீட்டர்

◆ ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது

 - ஸ்டிரியோ ஸ்கோப்

◆ செவிப்பறையை பரிசோதிக்க 

- ஓடோஸ்கோப்

◆ காகிதத்தின் கனத்தை அளவிட

 - கார்புரேட்டர்

◆ காற்றுடன் பெட்ரோலைக் கலக்க

 - கார்புரேட்டர்

◆ நிறமாலைமானி 

- ஸ்பெக்ட்ராஸ்கோப்

◆ முட்டை குஞ்சு பொறிக்க

 - இன்குபேட்டர்

◆ நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண

 - ஸ்கோப் ட்ராங்கோ

◆ கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட

 - பிலிம்சால் கோடு

◆ மூலக்கூறு அமைப்பை அறிய

 - எலக்ட்ரான் நுண்ணோக்கி

◆ மாலிமிகள் திசை அறிய

 - காம்பஸ்

◆ இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க 

- செக்ஸ்டாண்ட்

◆ தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி 

- டெலி பிரிண்டர்

◆ புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது 

- லெசர் (LASER )

◆ எதிரி விமானத்தை அறிய

 - ரேடார் (RADER)

◆ இருதயத் துடிப்பை அளவிட 

- E.C.G (Electro Cardio Gram)

◆ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண

 - ஸ்டெத்தாஸ்கோப்

◆ மழையளவை அளக்க 

- ரெயின் காஜ்

◆ இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண

 - ஸ்டெத்தாஸ்கோப்

◆ நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க 

- மைக்ரோஸ்கோப்

◆ தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க 

- பைனாகுலர், டெலஸ்கோப்

◆ சமபரப்பை அளக்க உதவும் கருவி 

- ஸ்பிரிட் லெவல்

◆ காந்தப் புலங்களை அறிய 

- மாக்னடோ மீட்டர்

◆ இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய

 - ஹிமோசைட்டோ மீட்டர்

◆ நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட 

- கானாங்கின் போட்டோ மீட்டர்

◆ ஒளிவிலகல் எண்ணை அளக்க

 - ஸ்பெக்ட்ரோ மீட்டர்

◆ மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி 

- ஸ்பெக்ட்ரோஸ்கோப்

◆ கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க

 -ஸ்பியரோ மீட்டர்

◆ மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய 

- பைரோ மீட்டர்

◆ உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட 

-தெர்மோ மீட்டர்

◆ திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி 

- பைக்கோமீட்டர்

◆ படிகங்களின் கோணங்களை அளக்க 

- கோனியோ மீட்டர்

◆ ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க

 - ஆல்கஹாலோ மீட்டர்

◆ ஒளியின் அளவை அறிய

  -  போட்டோ மீட்டர்

◆ நீராவி அழுத்தத்தை அளக்க 

- மானோ மீட்டர்

◆ சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க

 - கால்வனா மீட்டர்

◆ மின்னழுத்த வேறுபாட்டை அளக்க 

- வோல்ட் மீட்டர்

◆ கடலின் ஆழம் அறிய 

- சோனா மீட்டர்

◆ விமானங்களின் வேகத்தை அறிய 

- டேக்கோ மீட்டர்

◆ கார் ஒடும் வேகத்தை அறிய

 - ஸ்பீடோ மீட்டர்

◆ இரத்த அழுத்தத்தை அளக்க 

- பிக்மோ மானோ மீட்டர்



1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...